செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (07:11 IST)

15வது ஓவரில் 4 பந்துகள் முடிந்ததும் ஆளை அனுப்பி வைத்த ஆஷிஷ் நெக்ரா.. என்ன சொல்லியிருப்பார்?

நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் 15 ஓவர்களில் 171 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் 14.4 ஓவர்களில் 158 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடித்திருந்தது 
 
கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் ஆஷிஷ் நெஹ்ரா தண்ணீர் கொடுக்க ஒரு ஆளை அனுப்பி வைத்து கடைசி ஓவர் வீசிய மொஹித் சர்மாவுக்கு சில டிப்ஸ்களை வழங்கினார். அவர் வழங்கிய டிப்ஸ் கண்டிப்பாக முதல் நான்கு பந்துகள் போலவே அடுத்த இரண்டு பந்துகளையும் யார்க்கராக வீச வேண்டும் என சொல்லியிருக்க வாய்ப்பு உண்டு. 
 
ஆனால் ஆஷிஷ் நெஹ்ரா அளித்த டிப்ஸ் மற்றும் மொஹ்த் சர்மாவின் பவுலிங் ஜடேஜாவிடம் எடுபடவில்லை. அடுத்த இரண்டு பந்துகள் ஜடேஜாவால் அடித்து நொறுக்கப்பட்டது. அவர் கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
 
Edited by Siva