இன்னைக்கு தல தோனி தினம்.. அதுனால சிஎஸ்கேதான் கப் அடிக்கும்! – ரசிகர்கள் சொல்லும் கணித கணிப்பு!
நேற்று நடக்க இருந்த ஐபிஎல் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் சென்னை அணிதான் கப் அடிக்கும் என சிஎஸ்கே ரசிகர்கள் சில கணித கணக்கீடுகளை முன்வைக்கின்றனர்.
பெரும் பரபரப்புடன் நடந்து வந்த ஐபிஎல் 16வது சீசனின் லீக் போட்டிகள், குவாலிபயர், எலிமினேட்டர் போட்டிகள் முடிவடைந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
நேற்று இறுதி போட்டி நடைபெற இருந்த நிலையில் அஹமதாபாத்தில் கனமழை பெய்ததால் போட்டி ரிசர்வ் டே ஆன இன்று நடைபெற உள்ளது. குஜராத் தொடர்ந்து 2வது முறை கோப்பையை வெல்லுமா? சென்னை அணி 5வது முறை கோப்பை வென்று மும்பை சாதனையை சமன் செய்யுமா? என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று தோனி நாள் என புதிய கணிக கணக்கீடை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள்.
இன்று மே 29ம் தேதி (5/29). இந்த எண்களை கூட்டினால் 5+2+9=16. இதை மீண்டும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை 1+6=7. ஏழாம் எண் என்பது தோனியின் ஜெர்சி எண். எனவே இன்று தோனிதான் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்று ஒரு கணிப்பை வைத்துள்ளனர். அதேபோல 2023ம் ஆண்டை கூட்டு தொகையாக மாற்றினால் 2+0+2+3=7 என்று வருகிறது. இதுவும் தோனியின் ஜெர்சி எண் என்பதால் இந்த ஆண்டு கோப்பை சிஎஸ்கேவுக்கு என்கிறது சிஎஸ்கே தரப்பு.
ஆனால் என்ன கணக்கீடு செய்தாலும் நேற்றைக்கு போல் இன்றும் மழை பெய்தால் போட்டி நடக்காமலே குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்பட்டு விடும் என்பதே நிதர்சனமாக உள்ளது. எனவே பல ரசிகர்கள் மழை வரக்கூடாது என வருண பகவானையும் வேண்டி வருகின்றனர்.
Edit by Prasanth.K