செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (17:07 IST)

நியூசிலாந்துக்கு 338 ரன்கள் இலக்கு: இந்தியா அபார பேட்டிங்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் விராத் கோஹ்லி ஆகிய இருவரின் சதத்தால் அபார ஸ்கோரை எட்டியுள்ளது.



 
 
இந்திய அணி நிர்ணயிக்க்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 337 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் சர்மா 147 ரன்களும், கேப்டன் விராத் கோஹ்லி, 113 ரன்களும் அடித்துள்ளனர்.
 
வெற்றி பெற 338ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இன்னும் சற்று நேரத்தில் களமிறங்கவுள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் மாயாஜாலம் நிகழ்த்தினால் இன்று தொடரை வெல்ல இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.