174 இலக்கு கொடுத்த பஞ்சாப்: பெங்களூருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறாத அணியாக இருக்கும் பெங்களூர் அணி இன்று பஞ்சாப் அணியுடன் மோதுகிறது
சண்டிகரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப்சிங் தலா 18 ரன்களும், அகர்வால் மற்றும் கான் தலா 15 ரன்களும் எடுத்துள்ளனர்.
பெங்களூரு தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுக்களையும், சிராஜ் மற்றும் எம்.எம்.அலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இன்னும் சில நிமிடங்களில் 174 என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியினர் பேட்டிங் செய்யவுள்ளனர். இன்றைய போட்டியிலாவது பெங்களூரு அணி தனது புள்ளிக்கணக்கை தொடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்