செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

எந்த ராசிக்கு எத்தனை முகம் அமைந்துள்ள ருத்ராட்சத்தை அணியலாம்...?

ருத்ராட்சத்தை சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம். ஆண், பெண், சாதி மதம் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம். 
ருதராட்சம் ஒரு அணிகலனாக இல்லாமல் மனதுக்கும், உடலுக்கும் நன்மை தரும் நிவாரணியாக பார்க்கப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதால், நமது சுவாசம் சுத்தப்படுத்தப் படுகிறது.
 
நம் உடலில் இருக்கும் 7 சக்கரங்களும் துரிதப்படுத்தப்படுகிறது. முதன்முதலாக ருத்ராட்சத்தை அணிபவர்கள் திங்கட்கிழமையிலும், பிற நல்ல நாட்களிலும் சிவன் கோவிலில் அபிஷேகம் முடிந்த பின் அணிந்து கொள்வது நல்லது.
 
ருத்ராட்சத்தில் பல்வேறு முகங்கள் இருக்கும். ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ப, எந்த ராசிக்கு எத்தனை முகம் அமைந்துள்ள ருத்ராட்சத்தை அணிந்தால் நலம் தரும் என்பதைப் பார்க்கலாம்.
அஸ்வினி - ஒன்பது முகம். பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம். கார்த்திகை - பனிரெண்டு முகம். ரோகிணி - இரண்டு முகம். மிருக சீரிஷம் - மூன்று முகம். திருவாதிரை - எட்டு முகம். புனர்பூசம் - ஐந்து முகம். பூசம் - ஏழு முகம். ஆயில்யம் - நான்கு முகம். மகம் - ஒன்பது முகம்.  பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
 
உத்திரம் - பனிரெண்டு முகம். ஹஸ்தம் - இரண்டு முகம். சித்திரை - மூன்று முகம். சுவாதி - எட்டு முகம். விசாகம் - ஐந்து முகம். அனுஷம்  - ஏழு முகம். கேட்டை - நான்கு முகம். மூலம் - ஒன்பது முகம். பூராடம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
 
உத்திராடம் - பனிரெண்டு முகம். திருவோணம் - இரண்டு முகம். அவிட்டம் - மூன்று முகம். சதயம் - எட்டு முகம். பூரட்டாதி - ஐந்து முகம்.  உத்திரட்டாதி - ஏழு முகம். ரேவதி - நான்கு முகம்.
 
அந்தந்த நட்சத்திரகாரர்கள் தங்களுக்கு உரிய ருத்ராட்சத்தை அணிந்து பயன் பெறலாம்.