செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By

வஜ்ராசனம் செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!

வஜ்ராசனத்தை எல்லா மதத்தினரும் பிரார்த்தனையின் போதும், தியானத்தின் போதும் இந்த ஆசனத்தை கைகொள்வதைக் காணமுடியும். இந்த ஆசனத்தை செய்வதால் இடுப்புவலி, வாதம், மூலம் போன்ற வியாதிகள் தீரும்.
செய்முறை:
 
கால்கள் இரண்டையும் மடக்கி இரு பக்கங்களிலும் பாதங்கள் தெரிய அமர்வதற்கு பதிலாக, அவைகளை அருகருகில் வைத்து அவைகளின் மீது புட்டங்கள் வைத்தும் அமரலாம். இரண்டு கால்களின் பாத விரல்கள் ஒன்றன் மீது ஒன்று பதிந்துள்ள நிலையில் நேராக அமரவேண்டும்.
 
பாதங்களின் உட்பகுதியில் புட்டங்கள் தொட்டுக்கொண்ட நிலையில் அமரவேண்டும். இவ்விரண்டு நிலைகளிலும் சுவாசம் ஒன்றுபோல்தான்  இருக்கும்.
 
இடுப்பிலிருந்து பாதம் வரை செல்லும் வஜ்ரநாடி அழுத்தப்படுவதால் இந்த ஆசனத்தை வஜ்ராசனம் என்று அழைக்கிறார்கள். இந்திரன் கையிலுள்ள வஜ்ராயுதத்தைப் போன்ற பலத்தை இது உடலுக்கு கொடுக்கும். 
 
வஜ்ரநாடி காம உணர்வோடு தொடர்புடையது. அது அழுத்தம் பெறுவதால் காம உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், விந்து சக்தியை ஓஜசாக மாற்றி மூளைக்கு அனுப்பி வைக்கிறது. 
 
மனம் புலன்வழி போகாமல் உள்முகமாக பயணிப்பதை ஐந்து நிமிட வஜ்ராசனப் பயிற்சியின் போது உணர முடியும். இல்லறத்தார், துரவறத்தார், பிரம்மச்சாரி என்று அனைத்து தரப்பினரும் இந்த ஆசனத்தை கைகொள்ளலாம்.