புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தலைவாசலில் தலைவைத்து படுக்கக்கூடாது என கூறுவதற்கான காரணம் என்ன...?

நம் வீட்டுத் தலைவாசல் பகுதி என்பது அந்தக் காலங்களில், வீட்டின் உள்ளே செல்பவர்கள் தலை குனிந்து செல்லும் அளவிற்கு தாழ்வாக தான் அமைந்திருக்கும். நம் வீட்டு வாசற்படியில் மகாலட்சுமியும், அஷ்ட லட்சுமியும் குடி கொண்டிருக்கிறார்கள்.

கும்ப தேவதைகள் வாசலில் இரண்டு பக்கமும் அமர்ந்திருப்பதாலும், அவர்களை நாம் வணங்கும் வகையில், தலையை குனிந்து செல்வதற்காகவே அப்படிப்பட்ட அமைப்பு அந்த காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி நாம் குனிந்து செல்லும்போது அந்த வாசற்படியை நம் கால்களால் மிதிக்காமல் உள்ளே செல்ல வேண்டும்.
 
தலைவாசலில் லட்சுமியும், அஷ்ட லட்சுமிகளும் குடியிருப்பதுப்போல, வாசல் கதவில் குலதெய்வம் குடியிருக்கும் என்பது நம்பிக்கை. அதனால்தான் நம் முன்னோர்கள் கதவினை சத்தம் போடாமல் திறக்க, மூட செய்ய சொல்வார்கள். நம் கூக்குரலுக்கு ஓடிவர நமது குலதெய்வம் கதவில் காத்திருக்கும். அதனால், கதவை காலால் உதைப்பதும், திறப்பதும் கூடாது. 
 
ஒரு கிண்ணத்தில் நீர் நிரப்பி அதில் புத்தம்புது மலர்களை கொண்டு அலங்கரிப்பது நல்ல சக்தியை வீட்டினுள் கிரகிக்க செய்யும். தினமும் புது மலர், தண்ணீர்  கொண்டு அலங்கரிக்க வேண்டும். பிளாஸ்டிக் மலர் கொண்டு அலங்கரிக்கக்கூடாது. வெளியில் சென்றுவிட்டு கால் அலம்பாமல் வீட்டினுள் வரக்கூடாது. இது சேறு, சகதி, கிருமிகளை வீட்டினுள் கொண்டு வருவதை தவிர்க்கும்.
 
தலைவாசலில் தலை வைத்து படுப்பது, வாசற்படியில் அமர்ந்து ஊர் கதை பேசுவது, தலைவாசலில் நிற்பது, தலைவாசலில் தும்புவது மாதிரியான செயல்களை செய்வது கூடாது. இவற்றின்மூலம் தேவையற்ற சக்திகளை நாமே வீட்டினுள் அழைத்து சென்று அல்லல்பட நேரிடும்.