வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (11:36 IST)

வரும் நாட்களில் வெங்காயம் விலை உயர வாய்ப்பு? காரணம் இதுதான்!

சென்னையில்  வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் வரும் நாட்களில் விலையேற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

சென்னையில் உள்ள மொத்த மார்க்கெட்களுக்கு வரும் வெங்காய வரத்து கடந்த வாரத்தை விட கால் மடங்கு இந்த வாரம் குறைந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் வெங்காய தட்டுபாடு ஏற்பட்டு விலையேற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 50 ரூபாய் வரை விற்கப்படும் வெங்காயம், சில்லரை கடைகளில் கிலோ 80 ரூபாய் வரை விற்க வாய்ப்புள்ளது.

இதைப் போலவே கேரட், தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவைகளின் விலையும் உயர்ந்துள்ளது.