வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வாராகி அம்மன் வழிபாட்டு பலன்கள் என்ன...?

வாராஹி அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும்  மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக்  காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்.
 
கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம். எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம். எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு  பலனடைகிறார்கள்.
 
தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வராகியை நமது வீட்டில் இருக்கும் பூஜையறையில் மந்திர ஜபத்தால்  வழிபடலாம்;பூஜையறை இல்லாதவர்கள் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கலாம்;
 
அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை  வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.
 
ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக் கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி.