அடிமாட்டு விலைக்கு கேட்ட ஓடிடி… பேக் அடித்த மூக்குத்தி அம்மன்!

Last Modified வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:47 IST)

நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் ரிலிஸாக வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் அவதாரமெடுத்து மூக்குத்தி
அம்மன்
படத்தில் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். வெறும் 50 நாட்களில் நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தி முடித்தனர்.

கொரோனா லாக்டவுன் சமயத்திலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அம்மன் தோற்றத்தில் கையில் வேல் ஏந்தி இருந்த நயன்தாராவை பார்த்து அவரது ரசிகர்களே கும்பிடு போட்டனர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தினை ஓடிடி பிளாட்பார்ம்களில் ஒன்றில் ரிலீஸ் செய்ய அதன் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் சம்மந்தப்பட்ட ஓடிடி நிறுவனம் 6 கோடிக்கு மேல் தர முடியாது என சொல்லிவிட்டதால் அந்த முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டதாம் படக்குழு. அதனால் நயன்தாராவை மூக்குத்தி அம்மனாக திரையரங்கில் தரிசனம் செய்வார்கள் ரசிகர்கள்.இதில் மேலும் படிக்கவும் :