வியாழன், 28 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

தியானம் செய்யும்போது பின்பற்றவேண்டிய சில விஷயங்கள்!!

நம்முடைய சில உடல் குறைபாடுகளுக்கு தியானம் தான் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. நாம் எந்த வயதில் வேண்டுமானாலும் தியானம்  செய்யலாம். தினமும் சுமார் 20 நிமிடங்கள் தியானம் செய்து வந்தால் நம் உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். 
* முதலில் நாம் தியானம் செய்வதற்கு சரியான நேரத்தை ஒதுக்க வேண்டும். பெரும்பாலும் அதிகாலை நேரமே தியானத்திற்கு உகந்த  நேரமாகும். காலையில் முடியாதவர்கள், மாலை நேரத்தில் தியானம் செய்யலாம். தினமும் ஒரே நேரத்தில் தியானத்தை மேற்கொள்வது  நல்லது.
 
* தியானம் செய்வதற்கான பொருத்தமான இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அமைதியான சூழ்நிலையில் தியானத்திற்கான  வசதியுடன் அவ்விடம் இருக்க வேண்டும். பொதுவாக, சத்தம் குறைந்த இடமாக இருக்க வேண்டும்.
 
* தியானம் செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும். சாப்பிட்டு விட்டு தியானம் செய்தால் சில சமயம் தூங்கி விடுவீர்கள். அப்படியே சாப்பிட்டாலும், இரண்டு மணி நேரம் கழித்து தியானம் செய்யலாம
 
* தியானம் செய்ய ஆரம்பிக்கும் முன் லூசான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உட்கார்ந்து தியானம் செய்ய ஒரு குட்டிப் பாயை  விரித்துக் கொள்ள வேண்டும். சம்மணம் போட்டு உட்கார்ந்து, முழங்கால்களின் மேல் கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்குமாறு உட்கார்ந்து, கழுத்தை ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின், கண்களை மூடி ஓரிரு மூச்சுக்களை மூக்கு மூலம்  மட்டும் இழுத்து விட வேண்டும்
 
* தியானத்தில் அமரும்போது அதில் மட்டுமே உங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். மூடிய கண்களை எந்தக் காரணத்தைக்  கொண்டும் தேவையில்லாமல் திறக்க வேண்டாம். இரு புருவங்களுக்கும் இடையில் மூடிய பார்வையை நிலை நிறுத்துங்கள். நம்மையும்  மீறிய ஒரு ஆற்றலை நினைத்துக் கொண்டு தியானத்தைத் தொடங்கலாம்.