மீனம்: ஆவணி மாத ராசிப் பலன்கள்

Last Updated: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (16:00 IST)
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - பலன்: வாக்கு நாணயங்களில் கவனமாக இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். நன்பர்களின் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.  அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.
தொழிலில்  பணம் கைக்கு வந்து சேரும். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும். நண்பர்கள் முலமாக செய்து வந்த காரியங்கள் அனைத்து சுலபமாக வெற்றி பெறும். தொழிலில் கவனமாக செயல்படவேண்டியது அவசியம்.
 
குடும்பத்தில் சகோதரர்களால் நன்மை உண்டாகும். கணவனுக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  எல்லா வகையிலும் போராடி வாழ்கையை வெல்லவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். பெண்களுக்கு சதா  எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும்  முன்பு தீர ஆலோசிப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும்.  வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில்  ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.
 
அரசியல்துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்கு  பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப்  பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.
 
மாணவர்களுக்கு கல்வியில் கடினமான உழைப்பும் எண்ணம் கவனத்தை சிதராமல் படிப்பில் கவனத்தை செலுத்தி படிக்கவேண்டும் என்ற  ஆர்வமும் வேண்டும்.
 
பூரட்டாதி 4ம் பாதம்:
 
இந்த மாதம் உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உதவிகள் கிடைத்தாலும் பொறுப்புகளும் சற்று அதிகரிக்கவே செய்யும். புத்திரவழியில்  மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சாதகமான நற்பலனைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும்  கடனுதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்திச் செய்யமுடியும்.
 
உத்திரட்டாதி:
 
இந்த மாதம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு  பலனைப் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராகவே இருக்கும்.
 
ரேவதி:
 
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைந்து பலமும், வளமும் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களின் வருகையால்  மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
 
பரிகாரம்: குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 3, 4.
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 28, 29.


இதில் மேலும் படிக்கவும் :