வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா...?

இந்து மதத்தில் எந்தெந்த செய்களில் ஈடுபட்டால் கர்மாவிற்கு புண்ணியம் சேரும், மற்றும் பாவம் சேரும் என்பது பற்றி பல விஷயங்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும், முற்காலத்தில் இருந்தே, தனது தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பதை விட  புண்ணியம் சேர்ப்பது  தான் அவசியம் என கருதினர்.
* அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.
 
* வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.
 
* பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.
 
* கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.
 
* தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.
 
* நெய், எண்ணெய் தானம் - நோய் தீர்க்கும்.
 
* தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.
 
* வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.
 
* தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்.
 
* நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.
 
* அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.
 
* பால் தானம் - துக்கம் நீங்கும்.
 
* தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.
 
* தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.
 
* பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.