மனித உடலில் இயங்கும் ஏழு சக்கரங்கள் என்ன...?

சக்கரங்கள் மனிதனின் உடலில் 114 உள்ளது. இவை பல இருப்பினும் ஏழு சக்கரங்கள் மிக முக்கியமானவை. இந்த சக்கரங்கள் அனைத்தும்  நரம்புகளின் மைய பிணைப்பில் அமைய பெற்றிருக்கும். இந்த சக்கரங்களின் பங்களிப்பு இல்லாமல் மனித உடல் சக்தி நிலையை எட்ட  முடியாது. ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஆட்சி கிரகம் உள்ளது.
7 சக்கரங்கள்:
 
* மூலாதாரம்
* ஸ்வாதிஷ்டானம்
* மணிபூரகம்
* அனாஹதம்
* விசுத்தி
* ஆக்ஞா
* சகஸ்ரஹாரம்
* மூலாதாரம்
 
மூலாதார சக்கரம்: இந்த சக்கரமே அடிப்படை சக்கரம் . இது ஆசனவாய்க்கும் பிறப்புறுப்பிற்கும் நடுவே அமைய பெற்றிருக்கும். இந்த சக்கரம் தொழில், பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆண்மை சுரப்பி மற்றும் கருப்பை குழாயை கட்டுப்படுத்தும் சக்கரம் இந்த மூலாதாரம்.  மூலாதாரத்தின் கிரகம் - பூமி மற்றும் சனி இதன் நிறம் சிவப்பு.
 
ஸ்வாதிஸ்தானம்: இரண்டாவது சக்கரம் பிறப்புறுப்புக்கு சற்று மேலே அமைந்திருக்கும். பாலுணர்வை உள்ளடக்கியது.பாலின சுரப்பியை கட்டுப்படுத்தும். இதன் கிரகம் சந்திரன் மற்றும் புளூட்டோ. இதன் நிறம் செம்மஞ்சள்.
 
மணிபூரகம்: இந்த சக்கரம் தொப்புளுக்கு கீழே அமையப்பெற்றிருக்கும். அட்ரீனல் சுரப்பியை கட்டுப்படுத்தும். இதன் கிரகம் செவ்வாய். இதன் நிறம் மஞ்சள் .இதன் ஆற்றல் நெருப்பு. இந்த சக்கரத்தை சமநிலை படுத்தினால் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
 
அனாஹதம்: விலா எலும்பிற்கு சற்று கீழே உள்ள சக்கரம். இதயத்திற்கு அருகில் உள்ளதால் இது அன்பின் ஆதார சக்கரம். நெஞ்சு கணைய  சுரப்பியை கட்டுப்படுத்தும். இதன் கிரகம் வெள்ளி. இதன் நிறம் பச்சை.
 
விசுத்தி: தொண்டைக்குழியில் அமைந்துள்ள சக்கரம். இது படைப்பாற்றல், பேச்சுத்திறன் ஆகியவற்றை உள்ளடக்கியது. தைராய்டு சுரப்பியை கட்டுப்படுத்தும். இதன் கிரகம் புதன் மற்றும் புளூட்டோ. இதன் நிறம் நீலம்.
 
ஆக்ஞா: நெற்றியின் நடுவில் இருபுருவங்களுக்கு மத்தியில் அமைத்துள்ளது ஆக்ஞா. பிட்யூட்டரி சுரப்பியை கட்டுப்படுத்தும். இது உள்ளுணர்வு மற்றும் பார்வையை உள்ளடக்கியது. இதன் கிரகம் குரு மற்றும் நெப்டியூன். இதன் நிறம் கருநீலம்.
 
சஹஸ்ரஹாரம்: உச்சந் தலையில் அமைந்திருக்கும். நம் உடலில் அமைய பெற்றிருக்கும் மைய நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தும் சக்கரம். இதன் கிரகம் யுரேனஸ். இதன் நிறம் ஊதா.


இதில் மேலும் படிக்கவும் :