முதன்மை பக்கம் > ஆன்மிகம் > புனிதப் பயணம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கானிஃப்நாத் புனிதத் தலம்!
அதன் தொடர்ச்சியாக தான் மக்களுக்கு சொல்ல நினைத்ததையும், ஆன்மீக வழிகளையும் கவிதைகளாக இயற்றினார். மேலும் அதில் பொதுமக்களின் கஷ்டங்களையும் எடுத்துரைத்தார்.

அவரது கவிதைகளை எவர் ஒருவர் படித்தாலும் அது அவரைப் பற்றிய கவிதை என்று கூறும் அளவிற்கு பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவும் அந்த கவிதைகள் அமைந்தன.

webdunia photoWD
இந்த தலத்தில் மாதுளம்பழ மரம் ஒன்று உள்ளது. இதனையு‌மப‌க்த‌ர்க‌ள் வழிபடுகின்றனர். அதாவது இந்த மாதுளம்பழ மரம், கானிஃப்நாத்தின் பக்தை தாலி பாயின் நினைவாக உள்ளது.


தாலிபாய் கானிஃப்நாத்தின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் ஜீவசமாதி ஆக விரும்பினார். அந்த சமயம் கானிஃப்நாத் தோன்றி அவருக்கு ஆசி வழங்கினார். அந்த சமயத்தில் அ‌ங்கு மாதுளம் பழ மரம் விருட்சமாக வளர்ந்தது. அதனாலேயே அதனை இந்த தலத்தின் விருட்சமாக கருதுகின்றனர்.

மேலும் இந்த இடத்தில்தான் அங்குள்ள கிராமங்களில் ஏதேனும் பிரச்சினை என்றால் பஞ்சாயத்துகள் நடத்தப்பட்டு நியாயமான தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எப்படிச் செல்வது?

சாலை மார்கமாக : மஹாராஷ்டிர மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில்தான் மதி கிராமம் அமைந்துள்ளது. அஹமத் நகரில் இருந்து பேருந்து மூலமாகவும், வாடகைக் கார்கள் மூலமாகவும் இந்த தலத்தை அடையலாம்.

ரயில் மார்கமாக : இந்த கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது அஹமத் நகர் ரயில் நிலையம்.

விமானம் மூலமாக : அஹமத் நகருக்கு 180 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புனே விமான நிலையம்.
வீடியோவைப் பாருங்கள்
<< 1 | 2 
புகைப்படத்தில்
கானிஃப்நாத் மகாராஜா புனிதத் தலம்!
மேலும்
ஸ்ரீஜகந்நாதரின் ரத யாத்திரை  
தலை‌‌கீ‌ழ் ஹனும‌ன்!  
சிதம்பரம் தில்லை ஸ்ரீ நடராஜர்  
மும்பையில் உள்ள மஹாலக்ஷ்மி கோயில்!  
ஸ்ரீ ஜெகதாம்பா மாதா!  
நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வைத்தியநாத சுவாமி!