சனி அமாவாசையன்று நடைபெறும் பூஜையின்போது உள்ளூரில் உள்ள பெரிய மனிதர்கள் முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.
இந்த கோயிலுக்கு வரும் அயலூர்காரர்கள் அனைவரும் அந்த கிராமத்தில் இருக்கும் பல வீடுகளில் கதவுகள் இல்லாமல் இருப்பதையும், கதவு இருந்தாலும் அவைகளில் தாழ்பாள்கள் இல்லாததையும், வீட்டிற்குள் ஆளில்லாமல் இருந்தாலும் வீடு அப்படியே இருப்பதையும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
தங்கள் கிராமத்தில் யார் திருட முயற்சித்தாலும் அவர்களை சனி பகவான் தண்டிப்பார் என்பது இங்கு நிலவி வரும் ஒரு பம்கிக்கை. இந்த நம்பிக்கைக்கு வலுவூட்டுவது போல ஏதாவது பொருட்கள் காணாமல் போனால் அந்த பொருள் மீண்டும் பறிகொடுத்தவர் கைக்கே வந்து சேர்கிறது.
இதுமட்டுமின்றி இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் எவரையாவது பாம்பு கடித்துவிட்டால் அவரை இந்த கோயிலுக்குள் கொண்டு வந்து ஒரு சிறப்பு பூஜை செய்தால் விஷம் இறங்கிவிடுகிறதாம்.
சனீஸ்வரர் கோயிலின் கிழக்குப் பக்கமாக இருக்கும் கிராமத்தின் பெயர் தேவ்காட். அந்த கிராமத்தில் ஸ்ரீதத்தாவிற்கு ஒரு கோயில் உள்ளது. இந்த கோயில் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
இந்த சனீஸ்வரர் கோயிலில் உள்ள வேப்பமரத்தின் இலைகள், சனி பகவானின் மீது நிழல் பட்டாலே அதன் இலைகள் உதிர்ந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.
இந்த கோயிலில் இருந்து மிக அருகில் தான் நமது நாட்டின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றான ஷீர்டி உள்ளது.
இக்கோயிலுக்கு எப்படி செல்வது?
விமான மார்கம் :
அருகில் உள்ள விமான நிலையம் பூனே. அங்கிருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கோயில்.
ரயில் மார்கமாக
ஸ்ரீராம்புர் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது இந்த கோயில்.
சாலை மார்கமாக
மும்பை - பூனே - அகமது நகர் வழியாக சனி ஷிங்னாபுருக்கு வரலாம். தூரம் 330 கி.மீ.
|