"வாரணசித்து புவன்த்ரய சரபூதா' ரம்ய ரினாம் சுகட்டிதஹில் சேவ்யமனா" அட்ரகடா விவிதா துஷ்க்ரிட்கரினோபி' பாபக்ஷயே விரஜாசஹ சுமனப்பிரகாஷா" - நாரத பூரன்
ஆன்மீக லட்சியங்களுக்காக...
நமது நாட்டின் புண்ணிய நதியான கங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ள வாரணாசி உலகிலேயே மிகப் பழமையான நகரம் என்பது மட்டுமன்றி இந்தியாவின் பண்பாட்டுத் தலைநகரமாகவும் திகழ்கின்றது. ஜோதிர்லிங்கம், விஸ்வேஸ்வரா அல்லது விஸ்வநாதா என்றழைக்கப்படும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள புகழ்மிக்க காசி விஸ்வநாதர் கோவில் இந்நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் ஆன்மீக வரலாற்றில் ஒரு சிறப்பு வாய்ந்த தனித்துவமிக்க இடம் விஸ்வேஸ்வரா ஜோதிர்லிங்கத்திற்கு உண்டு.
ஹிந்து மத நம்பிக்கைகளின்படி ஒருமுறை இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு கங்கை நதியில் நீராடினால், அது எந்தச் சாதியைச் சேர்ந்தவராயினும், ஆண், பெண், இளைஞர், முதியோர், தூய்மையானவர், அசுத்தமானவர் என யாராக இருந்தாலும் அவர் மோட்சத்திற்குச் செல்லும் பாதையில் இடப்படுவார். இதனால், பாரத பூமியில் வாழ்ந்துவரும் மக்களனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல விரும்பும் புனிதத் தலமாக காசி உள்ளது. இக்கோவிலுக்கு யாத்திரை வருபவர்கள் தங்கள் ஆசைகளில் ஒன்றையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்பதும் மரபாகும்.
ஞானத்தின் மையம்...
பூமி தோன்றியபோது விழுந்த முதல் ஒளிக்கதிர் காசியின் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதிருந்து காசி ஞானம், ஆன்மீகத்தின் மையமாகத் திகழ்கிறது. பல காலங்களுக்குப் பிறகு சிவன் வாரணாசிக்கு வந்து காசியில் நிரந்தரமாகத் தங்கியதாகவும், சிவபெருமானை வரவேற்க பிரம்மா 10 குதிரைகள் பூட்டிய ரதத்தை அனுப்பியதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
கோயில் அமைவிடம்...
கங்கை நதியின் அருகில் விஸ்வநாத கல்லி என்றழைக்கப்படும் சிறிய வீதியில் சிறுசிறு கோயில் தொடர்கள் கொண்ட வளாகம் அமைந்துள்ளது. ஏராளமான துணைக் கோயில்கள் சூழ்ந்திருக்க அதனுள் மையமாக திகழும் கோயிலில் விஸ்வநாதர் குடி கொண்டுள்ளார். அங்கு ஞான வாபி என்றோரு கிணறு உள்ளது. ஞானக் கிணறு என்றழைக்கப்படும் இந்தக் கிணறு கோயிலின் வடக்கில் உள்ளது.
விஸ்வநாதர் கோயிலில் கருவறையும் மைய மண்டபமும் உள்ளது. கருவறைக்குள் 60 செ.மீ. உயரமும் 90 செ.மீ. சுற்றளவும் கொண்ட வெள்ளி அரணிற்குள் கருங்கல்லினால் ஆன சிவலிங்கம் உள்ளது. வழிபாட்டிற்கு ஏற்றவாறு அமைதியான சூழலை உருவாக்கும் வகையில் கோயிலின் உட்புறம் சிறியதாக அதிக விசாலமின்றி உள்ளது.
|