முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > அருளுரை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இறைவனது சித்தம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது எப்படி?
"நாம் இன்பம் அனுபவிக்கும் நிலையைத் தாண்டியபோது ஆனந்தத்தை பெறுவோம். ஆசை உதவிற்று. இப்பொழுது அதுவே தடையாக உள்ளது"

-ஸ்ரீ அரவிந்தரின் "சிந்தனையும் மின்னொளியும்"


அவர்கள் அடைந்துள்ள பக்குவநிலைக்கு ஏற்றபடி, தங்களுடைய ஜீவனின் உண்மையை உணர்ந்து அதைத் தங்களுடைய வாழ்வில் வெளிப்படுத்த மனப்பூர்வமாக விரும்புகிறவர்களுக்கே இதைச் சொல்லுகிறேன் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

மேன்மேலும் உண்மைக்கு இணங்கிய முறையில் அவர்கள் கற்பிக்க வேண்டுமென்று நான் ஆசிரியர்களுக்குச் சொல்லுகிறேன், ஏனென்றால் உலகிலுள்ள கோடிக்கணக்கான பள்ளிக்கூடங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறோம். சாதாரண வாழ்க்கைக்கும் தெய்விக வாழ்க்கைக்கும், உண்மையில் வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டை அறிய - விஷயங்களை வேறு வகையாகப் பார்க்க - குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதற்காகவே நாம் அதை நடத்துகிறோம். சாதாரண வாழ்க்கையில் செய்வதையே இங்கேயும் செய்ய விரும்புவதில் பயனில்லை. வேறு எங்கேயும் அவர்களால் காண முடியாத ஒன்றைக் காணுமாறு மாணவர்களின் கண்களைத் திறப்பதே ஆசிரியரின் வாழ்க்கைப் பணியாம்.


அன்னையின் நூல் தொகுதி - பாகம் 4
கேள்விகளும் - பதில்களும
1950 - 51
<< 1 | 2 
மேலும்
இந்து மதம்: சுவாமி விவேகானந்தர்
இந்து மதம் - சுவாமி விவேகானந்தர்
இ‌ந்து மத‌ம் - சுவா‌மி ‌விவேகா‌ன‌ந்த‌ர்
‌இ‌ந்து மத‌ம் – சுவாமி விவேகானந்தர்
நமது ஜீவனின் ஏழு மையங்கள்
பரிமாணமும் அதிமன உணர்வும் – ஸ்ரீஅரவிந்தர்