ஒரு மனிதனைப் போன்று 10 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும் ஒரு காளையை அடக்குவதைத்தான் வீரத்தின், தீரத்தின் சாதனையாக தமிழர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் இதைத்தான் காட்டுமிராண்டித்தனமானது என்றும், இந்த நாகரீக சமுதாயத்தில் இதற்கு இடமில்லை என்றும் விலங்குகள் நல வாரியமும், நீதிமன்றமும் கூறுகின்றன. இவ்வாறு கூறித்தான் இதற்கு நீதிமன்றம் தடையும் விதித்து. இது வெறும் விளையாட்டாக இல்லாமல், இதையும் ஒரு வழிபாட்டு முறையாகவே தமிழர்கள் கருதி வருகின்றனர்.
பல்வேறு போராட்டங்களும் நடந்தன. பின்னர் தமிழக அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதியும், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 17 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு வெகுச் சிறப்பாக நடந்தது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழர்கள் மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவரும் கண்டு களித்தனர்.
நீங்களும் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பாருங்கள். பிறகு கூறுங்கள் இது பாரம்பரிய வீர விளையாட்டா அல்லது நாகரீக சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத விளையாட்டா என்று...
|