ரா‌சி பல‌ன் | ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் | எ‌ண் ஜோ‌திட‌ம் | டார‌ட் | க‌ட்டுரைக‌ள் | ப‌ரிகார‌ங்க‌ள் | ஆலோசனை | பூ‌ர்‌வீக ஞான‌ம் | கே‌ள்‌வி-ப‌தி‌ல் | வா‌ஸ்து | ‌பிரபல‌ங்க‌ள்
முதன்மை பக்கம் ஆன்மிகம் » ஜோ‌திட‌ம் » கே‌ள்‌வி-ப‌தி‌ல் » குறை நித்திரையன் என்று ஜாதகத்தில்...
கே‌ள்‌வி-ப‌தி‌ல்
Bookmark and Share Feedback Print
 
ஜாதகத்தில் குறை நித்திரையன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தூங்கும் நேரத்தில் இரவில் கூட சரியாகத் தூங்கமாட்டார்கள் என்று சொல்கிறார்கள். இந்த‌க் குறை நித்திரை என்பது கிட்டத்தட்ட வியாதி நிலைக்குக் கூட கொண்டு சென்றுவிடும். இந்த குறை நித்திரை என்பது ஒருவருக்கு ஏன் வருகிறது?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

12ஆம் இடம் நித்திரைக்கான இடம். 1, 2 என்று 12 வீடுகள் இருக்கிறது. 1 லக்னம், உடல், தோற்றம் இதெல்லாம் அடங்கும். 2ஆம் இடம் வாஸ்து, குடும்பம் என்று சொல்கிறோம். இதுபோல 12ஆம் இடம் சயனத்தானம். இந்த சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும்.

சயனத் தானத்தில் ராகு, கேது, சனி, செவ்வாய் இந்த மாதிரியான கிரகங்கள் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் இருக்காது. கோழித் தூக்கம் என்று சொல்வார்களே அந்த மாதிரியான அமைப்புகள் இருக்கும். இதை ஜாதக அமைப்பை வைத்து கண்டுபிடிக்கலாம்.

இவர்கள் சரியாக உறங்குவார்களா, நிம்மதியா உறங்க முடியாதா? என்பதையெல்லாம் கண்டுபிடிக்கலாம். அதனால், இந்த 12ஆம் இடமான சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும். அப்படி நன்றாக இருந்தால் அவர்கள் ஆழ்ந்த நித்திரை கொள்வார்களா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக சந்திரன் உடலிற்குரிய கிரகம். இந்த சந்திரன் சனி, ராகு மாதிரியான கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் நிம்மதியான தூக்கம் வரவே வராது. சந்திரன் சனி, ராகுவுடன் சேர்ந்திருந்தால் சிறு வயதில் ஏற்பட்ட இழப்புகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் இதை நடுநடுவில் நினைத்து நினைத்து தூக்கம் கெட்டுப்போய் பரிதவிப்பார்கள். இந்த மாதிரியான அமைப்புகளும் உண்டு.

இதேபோல பார்த்தீர்களென்றால், 12இல் செவ்வாய், 6க்குரிய கிரகங்கள் இருந்தாலும் ஏதேனும் கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தைக் கெடுக்கும். 12இல் கெட்ட கிரகங்கள் அமர்ந்தால் தரையில் படுத்து உறங்குதல், சரியான படுக்கை இல்லாமல் போவது, காற்றோட்டம் இல்லாத அறையில் படுத்து உறங்குதல், உட்கார்ந்த நிலையில் தூங்குதல் இந்த மாதியான பாதிப்புகளும் உண்டாகும்.

அதனால் இந்த சயனத்தானமான 12ஆம் இடம் மிகவும் முக்கியமான இடம். இந்த 12ஆம் இடத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால், “படுத்தால் தூக்கம் வருதுங்க, ஒன்றும் பிரச்சனை இல்லைங்க, நிறைய பேர் கோடி கோடியாய் வைத்துக்கொண்டு தூக்கம் இல்லாம தவிக்கிறார்கள். அந்தப் பிரச்சனை எனக்கு இல்லைங்” என்பார்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: குறை நித்திரை, தூக்கம், உறக்கம், கப வித்யாதரன்