முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > க‌ட்டுரைக‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா?
எனக்கு தெரிந்த ஒருவர், திருமணம் ஆனவர். தொழிலில் கடுமையான போட்டி காரணமாக கடுமையாக உழைக்க வேண்டிய நிலை. இரவு 11.30 மணிக்கு வந்து படுப்பது, காலையில் எழுந்து சென்றுவிடுவது என்று இருந்தது. அப்பொழுது காமமே இல்லாமல் இருந்துவிட்டார். ஆனால், இப்ப ஒரு கடைக்கு நான்கு கடைகள் கட்டி முடித்துவிட்டார். அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அவரும் திருமணம் செய்துகொண்டார். ஏனென்றால், இப்ப அவருக்கு சுக்கிர திசை. இப்ப அவருக்கு வயசு 69. ஆனால் அவரைப் பார்த்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள். முதலில் ஒல்லியா இருந்தாரு. இப்ப சுக்கிர திசைன்றதால, உடம்பெல்லாம் பூசின மாதிரி, மலர்ந்த முகம் அந்த மாதிரி இருக்கிறார்.

அப்ப இளமை திரும்புகிறது என்பதெல்லாம் உண்மைதானா?

இதெல்லாம் நாங்கள் அனுபவப்பூர்வமா பார்த்தது. இப்ப அந்த திருமணமானவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இளமைக் காலத்தில பிறந்த அந்த இரண்டு குழந்தைகளை விட இந்தக் குழந்தை தகதகன்னு இருக்கிறது.

போன வாரத்தில் ஒருவர் வந்தார். முன்பெல்லாம் புணர்ச்சியின் போது என்னோட மனைவியால ஈடுகொடுக்கவே முடியாது. ஆனால் இப்போது என் மனைவிக்கு என்னால ஈடுகொடுக்க முடியவில்லை என்று சொன்னார். மூன்று வருடமா இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றும் சொன்னார்.

அவருக்கு பார்த்தீங்கன்னா, சனியும், புதனும் ஒன்றாக சேர்ந்து போகஸ்தானத்துல உட்கார்ந்த நிலையில் சனி திசை வந்துவிட்டது. சனியும், புதனும் 3ஆம் இடத்தில் சேர்ந்திருந்தா நக்குவது போன்றே இருக்கும். உயிர் குறி எழும்புவது, அதனோட வேகங்கள் இதெல்லாம் இருக்கும். ஏனென்றால் இந்த இரண்டுமே அலி கிரகங்கள். அலி கிரகங்கள் இரண்டும் சேர்ந்து போகஸ்தானத்தில் போய் சேரக்கூடாது.

அந்த டாக்டரைப் பார்த்தேன், வயாக்ரா வாங்கினேன் அப்படி இப்படின்னு சொன்னார். தயவு செய்து எங்கேயும் போய் அலையாதீங்க. இதுக்கான சில உணவு வகைகளெல்லாம் இருக்கிறது. இப்ப சனிக்கு கம்பு, கேழ்வரகு, மக்காச் சோளம் அந்த மாதிரி உணவுகளை உட்கொள்ளுங்கள். பிறகு சனிக்கு திறந்தவெளியில அதிக நேரம் இருந்தால் நல்லது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொட்டை மாடியில வாக்கிங் போங்க. திறந்தவெளியில் காற்று வாங்குங்க, அவித்த உணவுகளைவிட இயற்கை உணவுகளை எடுத்துக்குங்க அப்படீன்னு சொல்லி அனுப்பினேன்.

சனி இயல்பான கிரகம். இயற்கையான கிரகம். அதனால் இயற்கை உணவுகள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். அப்புறம் வந்தாரு. நல்ல மாற்றம் இருக்குங்க என்று சொன்னார்.

இதேபோல பெண்களுக்கும் ஏற்படும் இல்லையா?

ஆமாம், அவருக்கு சில பரிகாரங்களையும் சொல்வோம். பாதரசம், சில வேர்களுடைய சாறு, சில மூலிகைகளுடைய சாறுகளை கட்ட முடியும். அதாவது கட்டுகட்டுவது என்று சொல்வார்கள். அதை அணிந்துகொண்டு புணரும்போது, அதாவது முதுகுத் தண்டுவடம் முடியும் இடத்தில் அந்த மணியை நிறுத்திவிட்டு புணரும்போது புணர்ச்சி வேகம் அதிகரிக்கும். அதுமாதிரி சில பரிகாரங்கள் உண்டு.

கிரகங்களின் போக்கை உணர்ந்து, இப்போது என்ன தசா புத்தி நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். சில நேரங்களில் சனி திசையில் ராகு புக்தி, சனி திசையில் கேது புக்தி நடக்கும் போது டாக்டர்களிடம் போனா கூட அட்மிட் ஆகணும் சொன்னா கூட, செகன்ட் ஒபீனியன் கேளுங்க. தேர்ட் ஒபனீயன் கேளுங்க.

உங்கள் மகனை என்னவோ சொல்றீங்க. திடீரென்று மூட் அவுட்ல உங்க சட்டையைப் பிடிச்சிடுறான். ஐயோ, நான் வளர்த்ததே மார்ல பாயுதேன்னு அதிர்ச்சியாகி மூலையில முடங்காதீங்க. அந்த நேரம் பையன் கையால அவர் அடிவாங்குகிற நேரமாக இருக்கும். அதுல அதிர்ந்து நெஞ்சை பிடிச்சு உட்கார்ந்து, நான்காவது நாள் மாரடைப்பில் இறந்த தந்தையெல்லாம் உண்டு.

வளர்ந்த பையனையே நம்பி இருப்பாங்க. அவன் திடீரென்று இப்படி நடந்துவிட்ட பிறகு, அவ்வளவுதான்னு அதிர்ச்சியாயிடுவாங்க. இந்த மாதிரி பல நிகழ்வுகளெல்லாம் இதுல உண்டு. அதுல நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு புணர்ச்சி இல்லாமல் போவதும் உண்டு.

முறை தவறிய காமம் மற்ற பிற வாழ்க்கைக்கு வடிகாலாக இருக்கிறதா?

கே‌ள்‌வி‌க்கான ப‌திலை அடு‌த்த க‌ட்டுரை‌யி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
<< 1 | 2 
மேலும்
பஞ்சம் ஏதும் ஏற்படும் வாய்ப்பு உண்டாகுமா?
நல்ல திடகாத்திரமாக இருப்பவர் திடீரென நோய் வாய்பட்டு படுத்த படுக்கையாவதன் காரணம் என்ன? எப்படி முன்னறிவது?
ஏமாற்றும் எண்ணம் இருப்பது எதனால்?
ராசிக்கேற்றவாறு ஒவ்வொருவருக்கும் குணங்கள் வேறுபடுமா?
அகங்காரத்திற்கு காரணம் என்ன? இந்த மனப்பான்மைக்கு கிரகம், நட்சத்திரம், காரணங்களாகின்றனவா?
பெண்கள் சினிமாவில் ஆபாசமாக நடிப்பது பற்றி?