முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஜோ‌திட‌ம் > க‌ட்டுரைக‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தோஷங்கள், யோகங்கள் என்றால் என்ன?
தோஷங்கள் என்பது

தோஷங்கள் என்பது குறை அல்லது தடை என்று சொல்லலாம். முன் வினைப் பயனால் விளைவதுதான் தோஷங்கள். அதை இந்த பிறவியில் மேற்கொண்டு நிகழாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

ராகு, கேது என்ற முக்கியமான நிழல் கிரகங்கள்.

ஒரு ஜாதகத்தைப் பார்த்தோம். அவர் சிம்ம ராசியில் பிறந்தவர். அண்ணா பல்கலையில் முதல்நிலை மாணவராக தேர்ச்சி பெற்று தற்போது வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவரை விட குறைவாக படித்தவர்கள் எல்லாம் இவரை விட அதிகமான சம்பாதிக்கிறார்கள். இது ஒரு பெரிய மன வறுத்தத்தை அளிக்கிறது.

இவரது ராசி சிம்மம். சிம்மத்தின் ராசிநாதன் சூரியன் ராகுவுடன் இருக்கிறார். இது கிரகன தோஷம். ராகு வந்து பணியில் பாராட்டையோ, அதற்கான அங்கீகாரத்தையோ தராமல் மறைக்கும்.

ராகு பெண்களுக்குரிய கிரகம். அதுவும் விதவைப் பெண். ஒரு பெண்ணை விதவை ஆக்கி இருந்தாலோ அல்லது தெரிந்தோ தெரியாமலோ ஒரு கணவன் மனைவி பிரிவதற்குக் காரணமாக இருந்தாலோ, தனியாக இருக்கும் பெண்ணிடம் இருந்து தன, தானிய சம்பத்துகளை பறித்திருந்தாலோ, இளம் பெண்ணை ஏமாற்றி இருந்தாலோ இந்த பிறவியில் ராசி நாதனுடன் ராகு இருப்பான்.

எனவே இப்பிறவில் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்தல், ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு நகை வாங்கிக் கொடுப்பது போன்றவை செய்யலாம். மேலும், இந்த பிறவியில் வேறு எதுவும் பாவச் செயலில் ஈடுபடாமல் இருந்து கொள்ள வேண்டும். அதற்கான பரிகாரங்களையும் செய்ய வேண்டும்.

யோகங்கள்

முற்பிறவியில் செய்த

கெஜ கேசரி யோகம், புதாதித்ய யோகம் போன்ற 300க்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளன. இந்த யோகம் எல்லாம் பார்க்கப் போனால் அடுத்தவர்களை உடலால் இன்பமுற்றுபவர்களுக்குப் அதாவது பசியைப் போக்கும் தம்பதிகளுக்கு தேகமான பிள்ளைகள் பிறக்கும்.

இந்த பிறவியில் நாம் பெறும் அந்த பலனுக்கும், நாம் முற்பிறவியில் செய்த புண்ணியம்தான் காரணம்.

ஒரு பிறவியில் நாம் செய்யும் நல்ல, தீய நடவடிக்கைகளுக்குக் பிரதிபலன்தான் அடுத்த ஜென்மத்தில் நாம் அடையும் யோகங்கும், தோஷங்களும். ஆனால் இந்த ஜென்மத்தில் அதனை செய்யத் தூண்டுவதும் நமது கிரகங்கள்தான்.
<< 1 | 2 
மேலும்
பொது பட்ஜெட்?
கோ பூஜை, கஜ பூஜை எதற்காக செய்யப்படுகிறது?
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஜாதகம் பார்க்காமல் இருப்பதால் எந்த ‌பிர‌ச்‌சினையு‌ம் இ‌ல்லையே?
ராசிகாரர்களுக்கேற்ற வேலை!
மும்பையில் நடக்கும் செயல் ஒவ்வாததாக உள்ளது. இதற்குக் காரணம்?
கருக் கலைப்பு பாவச் செயலாக கருத முடியாது!