வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2023 (17:15 IST)

'பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'- அமைச்சர் மனோதங்கராஜுக்கு அண்ணாமலை சவால்

வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக அண்ணாமலை செயல்படுவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் இன்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், 'இந்தக் குற்றச்சாட்டை  நிரூபிக்கவில்லை எனில் உங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். 
 
உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். 
 
ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.
 
உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 
 
நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு' என்று தெரிவித்துள்ளார்.