ஊர் ஊரா சுத்தி, உல்லாசமா இருந்தோம்... இப்போ அந்த வீடியோவ வச்சு மிரட்டுரா: பதறும் ஆண்!

Last Updated: புதன், 7 ஆகஸ்ட் 2019 (11:25 IST)
கோவையை சேர்ந்த டிராவல்ஸ் ஓனர், பெண் போலீஸ் தன்னுடன் இருந்த நெருக்கமாக வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என புகார் அளித்துள்ளார். 
 
கோவையில் தனியார் டிராவல்ஸ் நடத்தி வரும் சதீஷ் குமார் என்பவர் தன்னுடையை கள்ளக்காதல் விவகாரத்தால் மனைவி மற்றும் மகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த மைதிலி என்னும் பெண்ணின் மூலம் கவிதா என்ற பெண் போலீஸில் நட்பு இவருக்கு கிடைத்துள்ளது. 
 
கவிதாவுடனான நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி அவ்வப்போது உடலுறவு கொண்டுள்ளனர். இதற்கு முன்னர் இவர்களது வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து சர்ச்சையானது. இதன் பின்னர் கவிதா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சதீஷ் குமார் கோவை மவாட்ட எஸ்பியை சந்தித்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 
அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு... எனக்கு கவிதா எனும் பெண் போலீஸுடன் நெருக்கமான உறவு இருந்தது. நாங்கல் இருவரும் ஊட்டி, மைசூரு, திருநள்ளாறு, வேளாங்கண்ணி என பல இடங்களில் சுற்றியுள்ளோம். 
 
எனது அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் நானும் கவிதவௌம் உல்லாசமாக இருந்த வீடியோ பதிவாகி இருந்துள்ளது. இந்த வீடியோவை என் அலுவலகத்தில் பணிபுரியும் மைதிலி கவிதாவிடம் கொடுத்துவிட்டார். 
 
இப்போது அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என. ஏற்கனவே ஏன்னிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை மிரட்டி பெற்றுக்கொண்டார். எனவே இந்த விவகாரத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :