வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (18:00 IST)

கோலா பாட்டிலுக்குள் பாலிதீன் பை: நீதிமன்றம் அதிரடி

5 வருடங்களாக நடந்து வந்த கோகோ கோலா நிறுவனத்தின் மீதான வழக்கின் விசாரணையில், நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டில், கோவையைச் சேர்ந்த் பூர்ணிமா என்பவர் ஒரு மளிகை கடையில் கோகோ கோலா வாங்கியுள்ளார். அந்த பாட்டிலை திறப்பதற்கு முன்பே அந்த பாட்டிலில் பாலிதீன் பை இருந்ததை பார்த்துள்ளார். இதனை குறித்து மளிகை கடைக்காரரிடம் கேட்டபோது, தனக்கு இது பற்றி எப்படி தெரியும்?, வேண்டுமானால் அந்த கோகோ கோலா கம்பெனியிடம் போய் கேளுங்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து கடைக்காரர் மீதும், கோகோ கோலா நிறுவனத்தின் மீதும் பூர்ணிமா வழக்கு தொடர்ந்தார்.

சுமார் 5 ஆண்டுகளாக இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில், நுகர்வோர் நீதிமன்றம் தற்போது ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுப் படி, ரூ.1 லட்சத்துக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் பழங்களும் உணவு பொருட்களும் வாங்கித் தரவேண்டும் என கூறியுள்ளது. மேலும் கோகோ கோலா நிறுவனத்துக்கு ரூ.75 ஆயிரமும், கடைக்காரருக்கு ரூ.25 ஆயிரமும் அபரதம் விதிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் வழக்கு நடந்ததால், வழக்கு செலவுக்கு பூர்ணிமாவுக்கு ரூ.3000 இழப்பீடு தரவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.