வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 16 ஜனவரி 2020 (21:33 IST)

20 போலீசாரை கொலை செய்ய வில்சன் கொலையாளிகள் திட்டமா? அதிர்ச்சி தகவல்!

களியக்காவிளையில் எஸ்.ஐ வில்சனை கொலை செய்த கொலையாளிகள் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை விசாரணை அதிகாரி ஸ்ரீநாத் அவர்கள் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடத்திய ஸ்ரீநாத் தற்போது பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் செய்யப்பட்ட விசாரணையில் 20 போலீசாரை கொலை செய்ய அவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிவித்துள்ளார் 
 
தங்களுடைய கூட்டாளிகளை கைது செய்ததால் காவல்துறையை பழிவாங்க திட்டம் போட்டதாகவும் முதல்கட்டமாக வில்சனை கொலை செய்துவிட்டு அதன் பின்னர் தொடர்ச்சியாக 20 போலீசார்களை கொலை செய்ய திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கைதான தீவிரவாதி சமீம் என்பவர் மீது ஏற்கனவே 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது