1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (14:43 IST)

தினகரன் அணியில் இணைகிறாரா பண்ருட்டி ராமச்சந்திரன்?

எம்ஜிஆரின் வலது கையாக இருந்தவர், ஜெயலலிதா காலத்திலும் சக்தி வாய்ந்த நபராக விளங்கியவர், பின்னர் விஜயகாந்தின் தேமுதிகவில் அவைத்தலைவராக இருந்தவர், மீண்டும் அதிமுகவில் இணைந்தவர் என்ற பெருமைக்குரியவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.



 
 
முதுபெரும் அரசியல் தலைவராக உள்ள இவர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியே உள்ளார். குறிப்பாக அதிமுக இரண்டு, மூன்று அணிகளாக பிரிந்ததில் அவர் மிகுந்த வருத்தம் அடைந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறினர்
 
இந்த நிலையில் இன்று பண்ருட்டி ராமச்சந்திரன் தினகரனை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் தினகரன் அணியில் இணைவார் என்றும் அவருக்கு கெளரவமான பதவி கொடுக்க தினகரன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தினகரன் அணியில் பண்ருட்டியார் இணைந்தால் அந்த அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.