புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (15:50 IST)

ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

கடந்த சில வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது ஆந்திரா அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆந்திரா – ஒடிசா கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.