வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 5 ஜனவரி 2019 (12:38 IST)

ஓவர் கான்ஃபிடெண்டில் திமுகவின் பூண்டியார்: அதிமுக, அமமுகவின் நிலை என்ன?

திருவாரூரில் அதிமுக, அமமுகவை ஒரு போட்டியாகவே கருதவில்லை என திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.
 
திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்தந்த கட்சிகள், தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். அதன்படி அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் என்பவர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் என்பவர் களமிறக்கப்பட உள்ளார்.
 
திருவாரூரில் திமுக சார்பில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட யாரேனும் போட்டியிடலாம் என தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருவாரூர் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டார்.  
13 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருக்கும் பூண்டி கலைவாணன், கருணாநிதி திருவாரூர் தொகுதியில் நிற்க வேண்டும் என்பதற்காக அந்த தொகுதியை இரண்டு முறை விட்டுக் கொடுத்தவர். திமுகவிற்காக நிறைய அடிப்படை பணிகளை திருவாரூரில் செய்தவர். ஆகவே அவரின் கை திருவாரூரில் ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பூண்டி கலைவாணன், திருவாரூர் திமுகவின் கோட்டை, இதை எந்த கட்சியாளும் அசைக்க முடியாது. என்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்த ஸ்டாலினுக்கு நன்றி. அவர்க்கு பரிசாக இமாலய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.