வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 4 ஜனவரி 2019 (20:01 IST)

யார் இந்த பூண்டி கலைவாணன்: ஸ்டாலின் திட்டம் கைகூடுமா?

திமுக தொண்டர்கள் பலர் ஏற்கனவே எதிர்பார்த்தபடி திருவாரூர் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
யார் இந்த பூண்டி கலைவாணன்? 
விவசாய குடும்பத்தை சேர்ந்த பூண்டி கலைவாணன் 2007 ஆம் ஆண்டில் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அன்று முதல் இன்று இவர்தான் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளராக இருக்கிறார். 
 
13 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருக்கும் பூண்டி கலைவாணன், திமுக மாவட்ட செயலாளராக இருந்த பூண்டி கலைச்செல்வனின் சகோதரர் ஆவார். சில அரசியல் பகை காரணமாக கொல்லப்பட்ட பின் பூண்டி கலைவாணன் திரூவாரூர் திமுகவிற்கு தலைமை தாங்கினார். 
 
எனவே, தொகுதியில் செல்வாக்கு பெற்றவரும், கருணாநிதி போட்டியிட்டபோது அவரது வெற்றிக்கு பெரிதும் பணியாற்றியவருமான பூண்டி கலைவாணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஸ்டாலின் தேர்வு கைகொடுக்குமா? 
பூண்டி கலைவாணன் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் நிற்க வேண்டும் என்பதற்காக அந்த தொகுதியை இரண்டு முறை விட்டுக் கொடுத்தவர். திமுகவிற்காக நிறைய அடிப்படை பணிகளை திருவாரூரில் செய்தவர். 
 
கருணாநிதி திருவாரூர் தொகுதியில் நின்ற இரண்டு தேர்தலிலும் அவர் வெற்றி பெற பூண்டி கலைவாணன் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தவர். மேலும், திமுக குடும்பத்திர்கும் நெருக்கமானவர். 
 
எனவே, தொகுதியில் மிகவும் பரிச்சயமானவர் என்பதால் வெற்றிக்கும் சந்தேகம் இருக்காது. அதோடு, கருணாநிதிக்காக உழைத்தவர் என்பதால் ஸ்டாலின் போட்ட கணக்கு கைகூடும் என தெரிகிறது.