ஹெலிகாப்டர் விபத்து: சம்பவ இடத்திற்கு விரையும் விமானப்படை தளபதி வி.,ஆர்.சவுத்ரி
குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து விபத்தை நேரில் பார்வையிட விமானப்படை தளபதி ஆர் சவுத்ரி அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தை நேரில் பார்வையிட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் மாலை குன்னுருக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அதேபோல் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் தமிழ்நாடு வர இருப்பதாக கூறப்படுகிறது
இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூருக்கு விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி வர இருப்பதாக கூறப்படுகிறது