ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (16:44 IST)

ஓட்டுநர்கள் போராட்டம் : வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி பாதிப்பு

காஞ்சிபுரம் உத்திரமேரூரில் அரசு கலைக்கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்ல வாகன ஓட்டுநர்கள் மறுத்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
தேர்தல் அதிகாரிகள் மூன்று நாட்களாக உணவும், பயணப்படி தரவில்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல ஓட்டுநர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தால் தேர்தல் பணி பாதிப்பு அடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகின்றன.