வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2019 (11:48 IST)

’வாக்கு இயந்திரங்கள் வொர்க் ஆகல...’ மறுதேர்தல் நடத்த வேண்டும் - முதல்வர் கடிதம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டு  பிரசாரம் மேற்கொண்டனர். வட - தென்னிந்தியாவில் சில இடங்களில் பிரசாரம் முடிந்ததை அடுத்து   இன்று சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுவருகிறது.
முதற்கட்ட மக்களவை தேர்தலில் சுமார் 14.22 கோடி வக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர்.
 
91 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 1279 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 
91 தொகுதிகளில் 1.70 லட்சத்திற்கும் மேலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 
பலத்த பாதுகாப்புடன் 20 தொகுதிகளில் 91 மக்களவை  தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
 
இந்நிலையில் ஆந்திராவில் தெலுங்குதேசம் - ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.பின்னர் போலீஸார் இருதரப்பினரையுன் விலக்கினர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில் காலை 9:30 முதல் ஆந்திராவில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குபதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன நிலையில்  பெரும்பாலான மக்கள் ஒட்டு போடாமல் சென்றனர். எனவே தேர்தல் நேரத்தை நீட்டிக்க வேண்டுமெனவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபுநாயுடு கடிதம் எழுதியுள்ளார்.