திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (21:11 IST)

திவாகரன், தினகரனுக்கு விவேக் அறிவுரை?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக பல துண்டுகளாக பிரிந்து தற்போதுதான் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. இந்த நிலையில் சசிகலா குடும்பத்தினர்களிடையே தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது.
 
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக திடீரென தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சசிகலா சிறை சென்றதற்கே தினகரன் தான் காரணம் என திவாகரன் குற்றம் சாட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் சசிகலாவின் உறவினரும் ஜெயா டிவியின் நிறுவனருமான விவேக், தினகரன், திவாகரன் ஆகிய இருவருக்கும் தனது டுவிட்டரில் மறைமுகமாக அறிவுரை கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது, 'நீண்டதூரம் பயணிக்க விரும்பினால் இணைந்து செல்லுங்கள், வேகமாகச் செல்ல வேண்டுமானால் தனியாக செல்லுங்கள்' என்று கூறியுள்ளார். இதுவொரு ஆப்பிரிக்க பழமொழி என்றும், ஆனால் அனைத்து தரப்பினர்களுக்கும் பொருந்தும் என்றும் விவேக் குறிப்பிட்டுள்ளார்.