1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (12:36 IST)

தினகரன் - திவாகரன் மோதலுக்கு பின்னால் எடப்பாடி? - நடப்பது என்ன?

தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பின்னால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவி இட, அதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் எதிர்வினையாற்ற தினகரன் - திவாகரனுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை பெறாமல் அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். சசிகலா சிறைக்கு சென்றதற்கே தினகரன்தான் காரணம். அவரின் முதல்வர் ஆசைதான் அனைத்து பிரச்சனைகளையும் கொண்டு வந்தது என பகீரங்கமாக திவாகரன் பேட்டியளித்துள்ளார்.
 
இந்த மோதல் தினகரன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியையும், எடப்பாடி-ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மகிழ்சியையும் கொடுத்திருக்கிறது. சமீப காலமாக தினகரன் ஊடகங்கள் அவ்வளவாக முன்னிலைப் படுத்துவதில்லை. அதற்கு பின்னால் எடப்பாடி இருக்கிறார் என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், திவாகரன் - தினகரன் மோதலுக்கும் அவரே காரணம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
 
அதாவது, கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைக்கும் தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளாரை தோற்கடித்து வெற்றி பெற்றார். இது எடப்பாடி தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. எனவே, அந்த நேரத்தில் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து வந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் மூலம் தினகரனின் அரசியல் பிரவேசத்தை தடுக்க எடப்பாடி திட்டமிட்டார். 

 
அதற்கு கொங்கு மண்டலத்தின்  முக்கிய  அதிமுக பிரமுகரும், சசிகலாவிற்கு நெருங்கிய உறவினருமான இராவணனை எடப்பாடி தேர்ந்தெடுத்தார். அவர் மூலமாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி  போயஸ் தோட்டத்திற்கு நெருக்கமானார். மேலும், கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய செங்கோட்டையனை ஓரம் கட்டி முதல்வர் பதவியை எடப்பாடி பெற்றார் என்பது வேறுகதை.
 
இராவணன் மூலம் திவாகரனுக்கு தூது அனுப்பப்பட்டதாம். சசிகலாவே பொதுச்செயலாளராக இருக்கட்டும். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பின் கட்சியையும், ஆட்சியையும் அவரிடம் ஒப்படைத்து விடுகிறோம். அதுவரை தினகரனின் தலையீடு இருக்கக்கூடாது. உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என எடப்பாடி சார்பாக திவாகரனிடம் இராவனன் பேசியதாக கூறப்படுகிறது.
 
இந்த டீலிங் திவாகரனுக்கு பிடித்துப் போக, இப்போது இருவரும் பகீரங்கமாக மோதி வருகின்றனர். இதன் மூலம், முதலமைச்சர் போட்டியில் தினகரன் இருக்க மாட்டார் என்பதே எடப்பாடியின் அரசியல் கணக்கு. 
 
தினகரனை ஓரங்கட்ட அரசியல் சதுரங்கத்தில் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார் எடப்பாடி. ஆனால், அதில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.