திமுக தவிர அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டன: விஜயகாந்த் அறிக்கை
திமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டதால் வாக்குகள் பிரிந்ததாகவும் அதனால்தான் திமுக வெற்றி பெற்றதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்
நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி என்று அதிகார பலம் ஆட்பலம் பணபலம் இன்றி தைரியமாக தேர்தல் களம் கண்ட தேமுதிக வேட்பாளர்களை பாராட்டுகிறேன் என்றும் இந்த தேர்தலில் திமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கூட்டணி என்று தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குகள் அதிக அளவில் பிரிவதற்கு காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் ஆளும் திமுக அரசு அதிகார பலத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளில் விதி மீறல்களில் ஈடுபட்டது என்றும், இந்த தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்ததுதான் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்