புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2020 (21:44 IST)

விமானிக்கு மாரடைப்பபு… தப்பித்த விஜயபாஸ்கர் உள்ளிட்ட 42 பேர் உயிர் !

அமைச்சர் ஜெயக்குமார் செல்ல இருந்த  விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது தமிழகம். இதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருது வழங்கப்பட இருந்தது. விருதை பெறுவதற்காக, திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்ல, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தார். 8.45 மணிக்கு விமானத்தில் அவர் செல்ல இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதற்குக் காரணம் அந்த விமானத்தை இயக்க இருந்த விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதால்தான் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை முன்னதாகவே அறிந்துகொண்டதால் 42 பயணிகளின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது.