எங்களுடன் தான் அமமுக கூட்டணி வைத்துள்ளது: விஜயபிரபாகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை எங்களுடன்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி வைத்துள்ளது என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக இந்த தேர்தலிலும் கூட்டணியை தொடர முயற்சித்தது. ஆனால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து தனித்து விடப்பட்டதாக கருதப்பட்டது
ஏற்கனவே திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடித்து விட்டது என்பதால் அங்கும் செல்ல முடியவில்லை. கமல்ஹாசன் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. இதனை அடுத்து கடைசியாக வேறு வழியில்லாமல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் தேமுதிக கூட்டணி வைத்தது
இந்த நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எங்களுடன் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி வைத்துள்ளது என்று பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது