செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (18:30 IST)

ஐந்து நாட்கள் பிரச்சாரம் செய்கிறார் விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்

வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அணியில் இணைந்து இருக்கும் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் கிடைத்திருக்கும் நிலையில் தற்போது பிரேமலதா மட்டுமே 60 தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்
 
எல்கே சுதீஷ் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் கேப்டன் விஜயகாந்த் களம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன
 
நாளை முதல் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் நாளை முதல் 5 நாட்கள் அவர் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் தேமுதிக தெரிவித்துள்ளது. திருத்தணியில் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து பிரச்சாரம் செய்யும் அவர் அதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி, பொதட்டூர்பேட்டை, சென்னை பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்
 
விஜயகாந்தின் சுற்றுப்பயணம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது