வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 மே 2021 (20:41 IST)

அடுத்த தேர்தல் வெற்றிக்காக அல்ல, இந்த தேர்தலுக்கான நன்றி: விஜய் வசந்த் நெகிழ்ச்சி

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் அவர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை தோற்கடித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தனது வெற்றி குறித்து தனது டுவிட்டரில் விஜய் வசந்த் கூறியதாவது: என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.  வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன்.
 
இந்த டுவிட்டுக்கு கமெண்ட் அடித்த நெட்டிசன் ஒருவர் கூறியதாவது: அடுத்த எலக்சன்லயும் வின் பண்ணனும் நினைச்சிங்கனா தொகுதி பக்கம் அப்பப்ப தலைய காட்டுங்க ப்ரோ’ 
 
நெட்டிசனின் இந்த டுவிட்டருக்கு பதிலளித்து விஜய் வசந்த் கூறியதாவது: அப்பப்ப இல்ல எப்பவுமே தொகுதி பக்கம் தான் இருக்க போகிறேன், இது அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல, இந்த தேர்தலில் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு’