வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (15:58 IST)

வேளச்சேரியில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம்: 9 மாதங்களுக்கு பின் எலும்புக்கூடு கண்டெடுப்பு

வேளச்சேரியில் கடந்த 9 மாதங்களுக்கு முன் பள்ளத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியான ஒருவரின் எலும்புக்கூடு தற்போது கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வேளச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென 50 அடி பள்ளத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை 10 பேரை மீட்டதாக கூறப்பட்டாலும் இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தீபக் பக்டி என்பவர் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் கட்டுமான பணி தொடங்கிய நிலையில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் எலும்புக்கூடு ஒன்று இருந்துள்ளது.

இதனை அடுத்து தகவல் அறிந்த போலீசார் அந்த எலும்பு கூடுகளை மீட்டு விபத்தில் சிக்கிய தீபக் பக்டியின் எலும்புக்கூடாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் மருத்துவ சோதனை முடிந்த பிறகு இது குறித்து உறுதியாக சொல்ல முடியும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Edited by Mahendran