வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (20:09 IST)

சென்னை வேளச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.. போக்குவரத்து மாற்றம்..!

Happy
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வேளச்சேரியில் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி  சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னை வேளச்சேரி பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வு நடைபெற உள்ளது. இதனை அடுத்து போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 ஜெ-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வேளச்சேரி உள்வட்ட சாலையில் 1.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 06.00 மணி முதல் 9.00 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியினை நடத்த தனியார் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
மேற்படி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்கவாக்க மாற்றும் செய்யப்படுகிறது
 
1. ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் சன்ஷைன் பள்ளி அருகில் வலது புறமாகத் திரும்பி எதிர்புறமுள்ள உள்ள வட்டச்சாலை வழியாகச் சென்று கைவேலி சந்திப்பில் "யு" திரும்பம் செய்து ரயில்வே மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம்.
 
2. விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்ள வட்டச் சாலையைப் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி இரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்புல் "யு" திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கைச் சென்றடையலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran