வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (10:49 IST)

”நாசக்கார திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும்,இல்லையென்றால்”.. வெடிக்கும் வைகோ

காவிரி படுகையில் செயல்படுத்தபடவுள்ள ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய நாசக்கார திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும்  என வைகோ எச்சரித்துள்ளார்

காவிரி ஆற்றுப்படுகையில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்கள், செயல்படுத்தப்படவுள்ள நிலையில், தமிழக அளவில் பல அமைப்புகள் அத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தை எதிர்த்து பல அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது போன்ற நாசக்கார திட்டங்களை கொண்டுவர மத்திய அரசு முனைந்தால் போராட்டம் வெடிக்கும் என வைகோ எச்சரித்துள்ளார்.

முன்னதாக காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை போதுமளவுக்கு எதிர்க்காமல், காங்கிரஸ் தான் இதற்கு காரணம் என மாநிலங்களவையில் பேசிய வைகோவிற்கு, காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களுக்கு எதிராக பல மேடைகளில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த திட்டங்களை குறித்து மத்திய அரசை எச்சரித்துள்ளார்.