1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 ஜூலை 2021 (21:12 IST)

நாளையும் கொரோனா தடுப்பூசி மையம் கிடையாது: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று தடுப்பூசி மையம் செயல்படாது என ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவித்த நிலையில் நாளையும் செயல்படாது என அறிவிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி தடுப்பூசி வந்ததும் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவித்து உள்ளது இதனால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் 
 
தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்ற குரல் தற்போது ஓங்கி ஒலித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது