ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 ஜூலை 2021 (18:39 IST)

கேரளாவில் மீண்டும் உயரும் கொரோனா: இன்று ஒரே நாளில் 13,563 பேர் பாதிப்பு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது 
 
இந்திய அளவில் தற்போது தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது என்பதும் தமிழகத்தில் சுமார் 3000 பேர்கள் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் 13,563 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 130 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்து இருப்பதாகவும் கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 1.13 லட்சம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது