சாலை ஓரமாய் போய்க் கொண்டிருந்தவர் மேல் கவிழ்ந்த லாரி- அதிர்ச்சி வீடியோ

lorry accident
Last Modified வெள்ளி, 14 ஜூன் 2019 (15:31 IST)
ஈரோடு அருகே சாலை ஓரமாய் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீது, அந்த வழியாக வேகமாக வந்த லாரி அப்படியே கவிழ்ந்து விழுந்தது. இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை தனியார் காகித ஆலையிலிருந்து அட்டைப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்தது ஒரு லாரி. அதிவேகத்தில் வந்த லாரி நாயக்கன்பாளையம் ரோட்டில் வந்த போது வளைக்க முயலும்போது கட்டுபாட்டை இழந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் சாலை ஓரமாக அவரது வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தார். கட்டுபாட்டை இழந்த லாரி அப்படியே பழனிசாமி மேல் கவிழ்ந்தது.

சுற்றியிருந்தவர்கள் உடனடியாக வண்டிக்கு கீழே சிக்கி கொண்ட பழனிசாமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பார்ப்போர் நெஞ்சை பதறவைக்கும்படி இருக்கிறது அந்த வீடியோ.இதில் மேலும் படிக்கவும் :