ஆடியோ ஓவர்... அடுத்து வீடியோ - ஜெயக்குமாருக்கு எதிராக களம் இறங்கும் தினகரன் டீம்

Last Modified புதன், 24 அக்டோபர் 2018 (11:16 IST)
அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து சில வீடியோக்களையும் தினகரன் தரப்பு வெளியிட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. சிபாரிசுக்கு வந்த பெண்ணை அவர் கற்பழித்ததால், அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றார் எனவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகியது. ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.  
 
ஆனால், ஆடியோவில் இருப்பது அனைத்தும் உண்மைதான். சிபாரிசுக்கு வந்த பெண்ணுக்கு பழச்சாற்றில் மயக்கமருந்து கலந்து கொடுத்து ஜெயக்குமார் கற்பழித்தார். அதன்பின், அடிக்கடி அப்பெண்ணை பயன்படுத்திக்கொண்டார். அதனால் குழந்தை பிறந்தது என வெற்றிவேல் எம்.எல்.ஏ இன்று செய்தியாளர்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 
 
மேலும், அமைச்சர் ஜெயக்குமாரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இலவச வீடுகளை கொடுத்து அவர் சரிகட்டினார். அந்த பெண்கள் தற்போது குடும்பமாகி வாழ்ந்து வருகின்றனர். எனவே, அதுபற்றி பேசினால் பலரின் வாழ்க்கை நாசமாகும். பெண்கள் விஷயத்தில் அவர் எப்படியென வட சென்னைக்கே தெரியும். விரைவில், அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் வெளியே வருவார்கள் என அவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
 
இந்த நிலையில், அடுத்த அதிரடியாக இன்னும் சில ஆடியோக்களையும், வீடியோவையும் வெளியிட தினகரன் டீம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து ஜெயக்குமாரின் அறிமுகம் முதல் குழந்தை பிறந்தது முதல் என்ன நடந்தது என வெற்றிவேல் விசாரிக்கும் வீடியோவை அப்பெண்ணுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளனராம். செய்தியாளர்களை சந்திக்க அப்பெண் தயங்குவதால், அந்த வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :