செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 ஜூலை 2018 (16:06 IST)

சேலத்தை தாண்டிதான எடப்பாடி போகனும் - தினகரன் பேட்டி (வீடியோ)

18 எம்எல்ஏக்கள் தேர்தலை பாராளுமன்றத் தேர்தலுடன் நடத்தினாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் நிச்சயம் எங்களுக்கு  நீதி கிடைக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 
சேலத்தில் அம்மா முன்னேற்ற கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சேலம் வருகை தந்திருந்த அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சேலத்திலிருந்து சென்னைக்கு பல்வேறு சாலைகள் உள்ளது அதை பயன்படுத்தாமல் விளை நிலங்களையும், மலைகள், நீர்நிலைகள், விவசாயத்தை அழித்து இந்த திட்டம் தேவையா என்று கேள்வி எழுப்பினர். சுற்று சூழலையும், விவசாயத்தையும் அழித்து வருகின்ற வளர்ச்சி சரியான வளர்ச்சி அல்ல என்றும் தெரிவித்தார். 
 
விவசாயங்களை அழித்துவிட்டால் காண்கிரீட் காடுகளாக தமிழகம் மாறிவிடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இன்னும் எத்தனை வருடத்திற்கு எடப்பாடி முதல்வராக இருக்கப் போகிறார். பதவியிலிருந்து தூக்கிய பின்பு சேலம் வழியாகத்தானே அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும். அப்போது, விவசாயிகளின் முகத்தில் எப்படி முழிப்பார் என் அவர் கேள்வி எழுப்பினார்.
 
நீதிமன்றத்தில் பதினெட்டு எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தின்மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்றும், அங்கும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு இல்லையென்றால் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவோம் என்றார். 
 
எங்களுடைய ஸ்லீப்பர் செல் வாக்கெடுப்பு நேரத்தில்தான் வெளியே வருவார்கள் என்று தெரிவித்த அவர், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் தீர்ப்பு வரும்வரை சட்டமன்றத்தில் அறுதிபெரும்பான்மை கொண்டுவரமுடியாது என்றும், தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அறுதிபெரும்பான்மை இல்லை. தீர்ப்பில் தங்களுக்கு சாதகமா  இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தலின்போது 18 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் அப்போது நாங்கள் வெற்றி பெறுவோம். அந்த நேரத்தில் அறுதிபெரும்பான்மை நிரூபிக்கமுடியாமல் ஆட்சி கவிழும் என்றார். இந்த ஆட்சியின் ஆயுட்காலம் மே மாதம்வரைதான் என்றார்.
 
கிறிஸ்டி நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர் குமாரசாமி திருச்செங்கோட்டை சேர்ந்தவர். இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பது தெரியவரும் என்றார்.
 
பேட்டி: தினகரன் -- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்.