திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 மார்ச் 2018 (11:39 IST)

7 கிமீ ஊர்வலமாக செல்லும் உஷாவின் உடல்: மக்கள் கண்ணீர் அஞ்சலி

நேற்று முன் தினம் இரவு திருச்சியில் போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கியதால் உயிரிழந்த உஷாவின் இறுதி ஊர்வலம் சற்றுமுன் தொடங்கியது.

உஷாவின் உடல் இறுதி ஊர்வலமாக 7 கிமீ எடுத்து செல்லப்படுகிறது. சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் நின்று உஷாவுக்கு தங்கள் இறுதியஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்த ஊர்வலத்தில் உஷாவின் உடல் வைக்கப்பட்டுள்ள அலங்கார வண்டியில் உட்கார்ந்து செல்லும் அவருடைய கணவர் ராஜா, கதறியழுவது கல்நெஞ்சையும் கரைய வைக்கும் வகையில் உள்ளது. ‘கடவுளே உனக்கு இரக்கம் இல்லையா’ என்று வழிநெடுகிலும் கதறிய கதறல் இருபுறங்களிலும் நின்றிருந்த பொதுமக்களை கண்ணீர்க்கடலில் மூழ்க வைத்துள்ளது.

முன்னதாக உஷாவின் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அஞ்சலி செலுத்தி உஷாவின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். உஷாவின் உடல் இன்னும் சில மணி நேரங்களில் அடக்கம் செய்யப்படவுள்ளது.