வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 மார்ச் 2018 (15:53 IST)

உஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி - முதல்வர் அறிவிப்பு

நேற்றிரவு திருச்சியில் காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் மோசமான செயலால் மூன்று மாத கர்ப்பிணி உஷா பரிதாபமாக உயிரிழந்தார். உஷாவின் கணவர் ராஜா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் உஷாவின் மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் காமராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் கர்ப்பிணி உஷாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. கதறியழும் உஷாவின் கணவரை தேற்ற முடியாமல் அவரது உறவினர்கள் திகைத்து போயுள்ளனர்.

இந்த நிலையில் திருச்சியில் உயிரிழந்த இளம்பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார்.